தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
வாழ்க்கையின் வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. வெற்றிக்கான உழைப்பு தெரியாது. எப்படி உயர்ந்துவிட்டான் என்று வியப்புடன் வெறுப்பைக் காட்டும் இயல்புதான் காணப்படுகிறது. அந்த வெற்றிக்குக் காரணமான உழைப்பைக் காண மறந்துவிடுகிறோம் என்பதை எடுத்துரைக்கிறது.
சாதிப்பவருக்கும், இயலாதவருக்கும் இடையே வேறுபாடு மிகச் சிறியதாகத்தான் இருக்கும். ஒரு அடிக்குப் பிந்தியவர் தோல்வியடையும் நிலை உள்ளது. எனவே வெற்றி, தோல்விக்கு இடையில் பெரிய வேறுபாடு இல்லை என எடுத்துரைக்கிறது. வெற்றி, நினைவாற்றலை அடிப்படையாக உடையது என்பதை துல்லியமாக உணர்த்துகிறது. எளிய மொழிநடையில் உழைப்பின் சிறப்பை எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்