நேர்த்தியாக வடிவமைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களால் நகர்த்தப்பட்டுள்ள நெடுங்கதை நுால்.
இளம் வயதிலே பெற்றோரை இழந்த பெண், தம்பியை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறாள். குடும்ப சேமிப்பை பயன்படுத்தி அன்றாடம் சமாளித்து வரும்போது மற்றொரு பெண்ணை சந்திக்கிறாள். அந்த பெண், காதலனிடம் சிபாரிசு செய்து பெரிய நிறுவனம் ஒன்றில் எதிர்பாராத நல்ல பணியை பெற்று தருகிறாள்.
அந்த நிறுவனத்தில் சந்திக்கும் இளைஞன் மீது விருப்பம், சந்திப்புகள், உணர்வு பெருக்கு என பாய்ந்து ஓடுகிறது. கலங்கியும், தெளிந்தும், விலகியும் திருங்கள் நிறைந்து வர்ண ஜாலம் காட்டுகிறது கதை. எளிய நடையில் காட்சி மயமாக சொல்லப்பட்டு உள்ளது. தெளிந்த நீரோடை போல் அமைந்துள்ள நெடுங்கதை நுால்.
– ராம்