கம்பராமாயண காவியத்தில் உள்ள காதல் மற்றும் காமத்தை அழகுற எடுத்துரைக்கும் நுால்.
ராமன் – சீதை பிணைப்பை நயத்துடன் சொல்கிறது. ராவணன் கொண்டது காமம் என எடுத்துரைக்கிறது. கண்ணோடு கண்ணைக் கவ்வும் கம்பன் கவிதையை விளக்குகிறது. சரணாகதி வழியாக பக்திக்கான இடங்களை குறிப்பிடுகிறது. பாத்திரப் படைப்புகள் வழியாக அது வெளிப்படுகிறது.
தசரதன் – கைகேயி காதல், சூர்ப்பனகை காதல், ராமன் – சீதை காதல், ராவணன் காதல், மண்டோதரியின் காதல், ஊர்மிளை காதல் என தனித்தனியாக விளக்கம் தருகிறது.
பக்திக்கு முதல் தேவை இறைவனே மேலான சக்தி என உணர அறிவுறுத்துகிறது. கம்பராமாயணத்தில் காதலும் பக்தியும் வரும் இடங்களை தொகுத்து அளிக்கும் நுால்.
-– புலவர் ரா.நாராயணன்