ஆன்மிகக் கருத்துகளை நினைவூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், முருக பெருமான், குல தெய்வ வழிபாடு, ஆதாரத் தலங்கள், சனாதன தர்மத்தின் கருத்துகள், எழுமையும் ஏமாப்புடைத்து, உயிரும் உடலும், அன்பே சிவம் போன்ற தலைப்பில் அமைந்து உள்ளன.
மொத்தம், 21 கட்டுரை மணிகள் ஒளி வீசுகின்றன. கதை படிப்பது போன்ற மொழிநடையில் உள்ளது. தனி மனித, சமூக நலன் மேம்படுத்தவல்ல செய்திகளைத் தாங்கியுள்ளன.
உரியவாறு வாழ்ந்து, சரியான சமயத்தில் பொறுப்புக்களை பகிர்ந்தளித்து, மகிழ்ச்சியுடன் வாழத் தெரிந்தவரே உண்மையில் வெற்றி பெற்றவர் என்கிறது. கற்பனை கலப்பில்லாமல் நடந்தவாறு எழுதப்பட்டுள்ள நுால்.
–- இளங்கோவன்