ராமானுஜர் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால்.
கஜினி முகமது காலத்தில், ராமானுஜர் டில்லி சென்று மேல்கோட்டை கோவிலின் உற்சவ மூர்த்தியான நாராயணர் சிலையை சுல்தானிடமிருந்து மீட்டு வந்ததை குறிப்பிடுகிறது. சோழ மன்னன் துன்புறுத்தியதால், கர்நாடகாவில் தலைமறைவாக இருந்து, முதல் குலோத்துங்கன் ஆட்சியில் திரும்பியதை கூறுகிறது.
சோழர் ஆட்சியை அறிய வைக்கிறது. வலங்கை, இடங்கை, கபாலிகர், காளாமுகர் வாழ்க்கையை விரிவாகத் தருகிறது. சைவ, வைணவ சமய பூசல்களை பதிவு செய்யும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு