துாது இலக்கணம் பற்றி விவரிக்கும் நுால். சைவத்திலும், வைணவத்திலும் இந்த வகை இலக்கியம் பெற்றிருந்த சிறப்பை எடுத்துக் கூறுகிறது. ஆழ்வார்கள் விடுத்த துாது பற்றி சொல்கிறது.
குருவின் சிறப்பை கூறுகிறது. கம்ப ராமாயணத்தில் ராமனின் அவதார சிறப்பை சொல்கிறது. மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்ற கொள்கையை உடைய பெரிய புராணக் கதையை விளக்குகிறது. சிலப்பதிகார நீதிகளை விளக்குகிறது.
நல்ல கருத்துக்கள் அமைந்துள்ள இளம் தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நுால்.