மூழ்கி எடுப்பது எல்லாம் முத்துக்கள் அல்ல; தேர்ந்தெடுப்பதில் தான் தரமே உள்ளது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, 24 பேரைப் பற்றிய மணிமாலை நுால்.
அரசியல், திரைப்படத்துறை, எழுத்துத்துறை, தொழில்துறை, பொதுத்துறை என பிரபலங்கள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த போது நட்புடன் பணியாற்றிய திறன் விவரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை, பாரிஸ் விமான நிலையத்தில் வரவேற்றது பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இடங்கள் பற்றிய வர்ணனை நேரில் பார்க்கும் பிரமிப்பை தருகிறது. ஈபிள் கோபுர வர்ணனையும், உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவிய மியூசியமும் பார்க்கும் ஆவலைத் துாண்டும். வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். வாய்ப்பு இல்லாதவர் நுாலை படிக்கலாம்.
– சீத்தலைச்சாத்தன்