வாழ்க்கை எளிமையாக அமைந்து விட்டால், நேர்மையாக வாழ்வது சுலபம் என எடுத்துரைக்கும் நுால்.
கலெக்டராக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. கடமை தவறாத ஊழியர்களின் வைராக்கியத்தையும் சொல்கிறது. கறார் அதிகாரியின் செயல், அவருக்கு எதிராக திரும்புவதை எடுத்துரைக்கிறது.
நேர்மையுடன் மனிதாபிமானம் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆர்வம், முயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்கிறது. எளியவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வலியுறுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்