வாழ்க்கை மேம்பட வியூகம் என்ற திட்டமிடல் அவசியம் என உணர்த்தும் நுால்.
வாழ்வில் முன்னேற்றத்துக்கு நியாயமான வழிமுறைகளை வகுக்கும் வழிகளைக் காட்டுகிறது. எந்த தளத்தில் நின்று வியூகங்கள் வகுக்க வேண்டும். அது எத்தனை சதவீதம் மேன்மையை தந்து வாழ்வை வெற்றிப்பாதையில் நடத்தும் என்பதை கணிப்பாக தருகிறது.
வகுக்கும் வியூகங்களின் தரம் எப்படி இருக்க வேண்டும்; அதனால் பலன் பெறுவோர் யார் என்பதையும் காட்டுகிறது. இவற்றை, உளவியல், தத்துவவியல், சமூகநலவியல் வழியாக நின்று எடுத்துரைக்கிறது. வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அரிய கருத்தை எளிய நடையில் விவரிக்கும் நுால்.
– ராம்