மாறுபட்ட படைப்பாக மலர்ந்துள்ள கதை நுால்.
ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கி பழகினாலே அது காதலில் தான் முடியும் என்ற பிற்போக்கான எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறது. அதுவும் ஊடக நிறுவனங்களில் காலம், நேரம் பார்க்காமல், இருபாலரும் பணிபுரிய வேண்டிய தவிர்க்க முடியாத சூழலை முன்வைத்து விளக்குகிறது. பணி சூழலில் ஏற்படும் சந்தேகம், குழப்பம், பணி இடத்தில் போட்டி, பொறாமை மனப்பான்மை பற்றி விவரிக்கிறது.
இவற்றால் ஏற்படும் விளைவுகளையும் நுட்பமாக குறிப்பிடுகிறது. திடீரென திருமண ஏற்பாடு செய்வதால், நிகழும் திருப்பங்களையும் காட்டுகிறது. ‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் இதழில், தொடராக வெளிவந்த கதை பின் புத்தகமாக்கப்பட்டுள்ளது.
– இளங்கோவன்