பெற்ற குழந்தைகள் மீது தாய் கொண்டிருக்கும் அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
கணவர், பிள்ளைகளுக்கு தினமும் தேவையானதை செய்து கொடுக்கிறார் தாய். அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் போது, கணவர், பிள்ளைகள் சேர்ந்து உதவி செய்வதை, ‘ஆறு மணி அலாரம்’ கதை பொறுப்புடன் பகிர்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் ஆடு வளர்க்கும் செயலை, ‘சிட்டி ஆட்டுக்குட்டி’ கதையில் சிறுவனின் நம்பிக்கையாக வெளிப்படுத்துகிறது.
இருட்டு பயத்தை போக்க, தாயின் செயலை காட்டும், ‘இருட்டு பயம்’ கதை, அச்சத்தை விலக்குகிறது. படிக்காத சிறுவனுடன் நட்பு வைத்தால், மகன் வாழ்க்கை பாழாகும் என கருதும் தந்தைக்கு புரிதல் ஏற்படுத்தும் தாயின் செயலை, ‘மைனஸ்... பிளஸ்’ கதை எடுத்துரைக்கிறது.
– டி.எஸ்.ராயன்