பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட அகத்திணையைப் பற்றிய வினாக்கள் பலவற்றை எழுப்பி, விடைகளை துலக்கமாகத் தரும் நுால்.
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலிருந்து அகப்பாடல்களை எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறுந்தொகை, நற்றிணை, அகநானுாறு, பத்துப்பாட்டு, பரிபாடலில் உள்ள பாடல்களின் தன்மைகளை கூர்ந்தாய்ந்து தனித்தனியே தந்துள்ளது.
தமிழ் காதல் நெறிகளைக் கொண்ட அகத்திணையில் உள்ளார்ந்த உளவியல் கூறுகளை விளக்குகிறது. மூலச்செய்யுள்களை ஊன்றிப் படித்தால் மட்டுமே உட்பொருளை அறிய முடியும் என உணர்த்துகிறது. அகத்திணைப் பாகுபாடுகள் நுட்பமாக விவாதிக்கப்பட்டுள்ளன. இலக்கிய ஆவணமாக விளங்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு