ஆரண்ய ராமாயணம் ஆறு காண்ட நிகழ்ச்சிகளை தொகுத்து, எளிய உரைநடையில் ஆய்வு நோக்கில் தரும் நுால்.
வான்மீகி ராமாயணம் அரங்கேறிய வரலாற்று நிகழ்வை விவரித்துக் கூறுகிறது. இந்தோனேஷியா, மலேஷியா நாடுகளிலும், ராமாயணம் பல வடிவங்களில் பிரபலமாக நடிக்கப்படும் தகவலை பகிர்கிறது. வான்மீகி ராமாயணத்தில் ராமேஸ்வரம், வேதாரண்யம் ஊர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கிறது.
மாரீசன் மாய மானாக உருவெடுத்து புல்லை மேய்ந்த ஊர், பொன் மான் மேய்ந்த நல்லுார் என தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வழங்கப் பெறுவதாக குறிப்பிடுகிறது. ராமாயணம் தொடர்புள்ள இடங்களை தொகுத்து வழங்குகிறது. வான்மீகி, கம்பர் எழுதிய ராமாயணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வோருக்கு தகவல்கள் தந்து உதவும் நுால்.
– முனைவர் ரா.நாராயணன்