பத்திரிகைகளில் வெளிவந்த 17 கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
கம்பன், வள்ளுவன், இளங்கோ என, பாரதி முதலில் கம்பனை வைத்தது பற்றிய விவாதத்தில் கருத்து சரியானது என வாதிடுகிறார். வள்ளுவன், இளங்கோவை விட கம்பன் தான், இருபாலருக்கும் கற்பை பொதுவில் வைத்தான் என்று சான்றுகளோடு நிறுவுகிறார்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் கொடுத்து உள்ளது. எதிர்க்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என கேள்வி கேட்கிறார். ஊழல், வாரிசுகள் வளர்ச்சி ஒழிந்தால் நாடு உருப்படும் என்றது சரியான சவுக்கடி. ஜாதிவாரி கணக்கெடுப்பை காட்டிலும், வறுமையில் உள்ளோர் பற்றிய கணக்கெடுப்பு, உயர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்