‘டிவி’ சின்னத்திரை தொடர் போல நிறைய கதாபாத்திரங்கள் அமைந்த நாவல். விறுவிறுப்புடன் சுவாரசியமாக படிக்கும் ஆவலை துாண்டுகிறது.
குமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தை சுற்றியே கதை நகர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கதை போக்கின் வண்ணம் மாறி, ஒரு சக்தி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. விழுந்திருந்த முடிச்சுகளை அவிழ்க்கிறது. கடைசியில் தான், ஒன்றுக்கு ஒன்று உள்ள தொடர்பு தெரிகிறது.
கதாநாயகி திருமணத்தை முதலில் வெறுத்து, பின்னர் சம்மதித்ததை சுவைபட விவரிக்கிறது. மனுஷனுக்கு குணமும் ஆரோக்கியமும் தான் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. கஞ்சனின் பெண்பால் கஞ்சி என்பது நகைச்சுவை. செக்ஸ் கல்வியின் தேவை சொல்லப்படுகிறது. படிக்க வேண்டிய நாவல்.
– சீத்தலைச்சாத்தான்