ஓம் ஸ்ரீ கந்தாசிரமம் டிரஸ்ட், உடையாப்பட்டி, சேலம்-636 140. (பக்கம்: 890).
சக்தி வழிபாடு இன்று உலகம் எங்கும் அதிகமாக உள்ளது. வீட்டிலும் நாட்டிலும் பெண்களின் பங்களிப்பும் ஆதிக்கமும் அதிகமாகிக் கொண்டுள்ளது. கோயில் களில் கூட சக்தி வழிபாடு `சாக்தம்' இன்று உயர்ந்த நிலையில் உள்ளது.
சாக்த தத்துவத்தையும், பத்து வகையான சக்தி தெய்வங்களைப் பற்றியும், சமஸ் கிருதம், தமிழ் இரு வகையிலும், இந்த விரி வான நூல் விளக்குகிறது. புதுக்கோட்டை யில்
புவனேசுவரி அம்பாளுக்கும் சேலம் உடையாப்பட்டியில் மலைகள் சூழ்ந்த அழகிய கந்தாசிரமத்தில் 18 கை துர்க்கை, தண்டபாணிக்கும், நாமக்கல் பக்கத்தில் தத்தாத்திரேயருக்கு சேந்தமங்கலத்திலும் மூன்று அற்புதமான கோயில்களைக் கட்டி பல ஆயிரம் யாகங்களை நடத்தி அம்பாள் அருள் பெற்றவருமான தவத்திரு சாந்தானந்த சுவாமிகளின் வாழ்நாள் பணிகளையும் அருளையும் இந்த நூல் விரிவாகக் கூறுகிறது.
பாமரரும் அறியும் வகையில் அம்பாள் வழிபாட்டு முறைகள், அதன் பயன்கள், தத்துவங்கள் ஆகியன தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.