விலங்குகளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும் வண்ணம் அமைந்துள்ளது.
காட்டில் கொடுங்கோலாட்சி புரிந்த சிங்கத்தை அகற்றிய சுண்டெலியின் தீரச்செயல்கள் தான் கதையின் மையம். விலங்குகளை கதாபாத்திரங்களாக்கி கற்பனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வர்ணனைகள் ஆர்வமூட்டுகின்றன.
நல்வாழ்வுக்கு உதவும் மக்கள் ஆட்சி முறையின் சிறப்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிகழ்வுகள் நகைச்சுவை பொங்கும் வகையில் விவரிக்கப்பட்டு உள்ளன. நாட்டின் பெருமை, மக்கள் தலைவராக வருவோருக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகள், சமூக சூழ்நிலையை எடுத்துரைக்கிறது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நுால்.
– மதி