கம்பராமாயண நிகழ்வுகளை குறிப்பிட்ட பாடல்கள் வழியாக விளக்கும் நுால். சிறப்பு வாய்ந்த 100 பாடல்களைத் தேர்ந்து எடுத்து விளக்கம் தருகிறது.
சிறப்புடன் கூடிய பாடல்களை குறிப்பிட்டு, ஆங்கில வரி வடிவில் எழுதி, பொருள் விளக்கத்தை எளிமையாகச் சொல்கிறது. கம்பன் கவிதைச் சிறப்பை இரு மொழிகளில் அறிய முடிகிறது.
உலகைப் படைத்து, காத்து, அழித்தல் தலைவன் இறைவன். அவனிடம் அடைக்கலம் புகுவதை அழகாக விளக்குகிறது. பஞ்ச பூதங்களையும் இணைத்து, அனுமன் வழிபாட்டிற்கு விளக்கம் தருகிறது. அடுத்தடுத்து படிக்க ஆவலைத் துாண்டுகிறது. ராமாயணக் கதையை எளிமையாக அறிந்து கொள்ள உதவும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்