மர்மம், ஏக்கம், எதிர்பார்ப்பு, வலி, கொடுமை, சந்தோஷங்கள் நிரம்பிய வாழ்வை சித்தரிக்கும் நாவல் நுால். இனிமையும், கோரமுகமும் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. கடைசி பகுதியில் உள்ள வர்ணனைகள் அத்தனை உணர்வுகளையும் வடிக்கின்றன.
சின்ன வாக்கியங்களில், சிறிய அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தது என்ன என்ற பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தொடர்ந்து வாசிக்க துாண்டுகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
ஏற்கனவே நடந்த சம்பவம் ஒன்றை எடுத்துக்காட்டி, இப்படியும் நடக்கலாம் என முன்வைக்கிறது. கல்யாணம் நிச்சயித்த பின் நடக்கும் ஆவலாதி நடைமுறைகளை எடுத்துக் காட்டுகிறது. மெழுகுவர்த்தி போல் அமைந்த கதாபாத்திரங்களுடன் பெண்களுக்காக எழுதப்பட்ட நாவல் நுால்.
– சீத்தலைச் சாத்தன்