குழந்தைகள் வழிகாட்டு மையத்தில் பணியாற்றிய அனுபவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நுால். குழந்தைகளை பராமரிக்கும் வழிமுறைகள் பற்றி தெளிவாக உள்ளது.
குழந்தை செயல்திறன், அறிவுத்திறன், மொழித்திறன், சமூகத்திறன் வளர்ச்சி எந்தெந்த பருவத்தில் வெளிப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. வெளிப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை வழிகாட்டி அறிவுறுத்துகிறது.
குழந்தை பேச்சை புரிந்து கொள்கிறதா, சொல்வதை கவனிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வேலைகளில் இடையூறு செய்யாமல் இருக்க குழந்தையிடம் அலைபேசி கொடுக்கும் அணுகுமுறை பற்றி விவாதிக்கிறது. கைக்குழந்தை வைத்துள்ள பெற்றோருக்கு உதவும் நுால்.
– நிலா