அன்னியப் படையெடுப்புகளால், குஜராத், சோமநாதர் கோவிலில் ஏற்பட்ட பாதிப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள நாவல்.
சோமநாதர் கோவிலை, 11 முறை கொள்ளையடித்து அழித்த கஜினி முகமது, இரும்புக் கதையால் உடைத்ததை வர்ணிக்கும் காட்சி நெஞ்சை பதற வைக்கும்.
கதாநாயகன் சோமநாதரின் பக்தனான பீமதேவன். கோவிலை காக்க படைகளுடன் வந்து கதாநாயகியை நரபலியிலிருந்து காத்து இறுதியில் காந்தர்வ திருமணம் செய்வது தான் கதை. வரலாற்று சம்பவம் அடிப்படையில் கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ள நாவல்.
– பேராசிரியர் ரா.நாராயணன்