மன்னர் ஆட்சி காலத்தில் நிலவிய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் நாவல் நுால். மன்னர் ஆட்சி காலத்தில் நிலவிய ஊழல்களை கதாபாத்திரங்கள் வாயிலாக எடுத்துக்காட்டி அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுதேசி சமஸ்தானங்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் நிலவிய சமூக நடைமுறையின் பின்புலத்தில் படைக்கப்பட்டுள்ளது. அந்த நாளைய அரசியல், ஆட்சி முறையில் நிலவிய ஊழல்கள், மக்களின் கடுமையான வாழ்நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.
குஜராத்தி மொழியில் முதன்முதலில், நான்கு பாகங்களாக உருவாக்கப்பட்டது. காந்திஜியின் பாராட்டை பெற்றது. சுருக்கப்பட்ட வடிவம் நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மன்னராட்சி அவலத்தை விவரிக்கும் நுால்.
– மதி