முருக பெருமான் ஆறு படை வீடுகள் பற்றிய முழு தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
வீடு பேறு தரும் வரலாற்று தொன்மை, சுவாமி அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவில்களுக்கு வழி, நடைபெறும் பூஜை முறைகள், நடை திறந்திருக்கும் நேரம் மற்றும் திருவிழாக்கள் என தகவல்களை உள்ளடக்கிய வழிகாட்டியாக உள்ளது.
கடற்கரை படை வீடு திருச்செந்துாரில் முருகன் பாதத்தில் பெறப்படும் பத்ர விபூதி பிரசாதம் பிரசித்தம். பழனியில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷாண சிலை சிறப்புகள் விளக்கப்படுகின்றன. திருத்தணிகை மலை முருகன் கோவிலின் அழகு விளக்கப்பட்டுள்ளது. முருக கவசமாக விளங்கும் நுால்.
– எம்.எம்.ஜெ.,