ஆன்மிகம் பற்றி தெளிவான அறிவை ஊட்டும் நுால்.
மனிதர்களிடம் பணம் இருக்கலாம்; ஆனால், நிம்மதி இல்லை. குடும்பம், அலுவலகம், வெளியிடம் என்று எங்கும் சண்டை சச்சரவு பெருகியுள்ளது. இவற்றை தீர்ப்பதற்கு உரிய தீர்வுகளை முன் வைக்கிறது.
நோய் தீர்க்க நாராயணீயம் இருக்கிறது. அதில் ஒரு ஸ்லோகமே உடலுக்கு நிம்மதியை கொடுக்கும். காசிக்குப் போகாமலே சொர்க்கம் செல்ல வழி காட்டுகிறார் ஒரு மகான். ஜோதிடம் பார்த்தால் பிரச்னை தீர்ந்து விடுமா என்பதற்கு விடை இருக்கிறது. ஒவ்வொரு கிரகமும் நன்மை செய்யவே இருக்கிறது. சனி பகவான் தரும் துன்பத்தை கடந்து, கிரகங்கள் தரும் நன்மையை அடையும் வழிமுறையும் தரப்பட்டுள்ள நுால்.
– தி.செல்லப்பா