பகவத் கீதை ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி ஆழமான கருத்துக்களை விளக்கும் நுால்.
அகங்காரத்தின் எத்தனையோ உருமாற்றங்களில் ஒன்றே ஈகோ என உரைக்கிறது. உண்மை மீதான பல கருத்துக்களே இன்று உலகில் காணும் வேறுபாடுகளுக்கு காரணம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. எல்லா தர்மங்களையும்விட்டு கிருஷ்ணரிடம் அடைக்கலம் அடைந்தால், எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்கிறது.
குணம் மற்றும் கர்மங்களால் மனிதர்கள் நான்கு வகையாக இருப்பது உண்மை என்று உரைக்கிறது. ஆனால், அது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக கூறுவதை பொய் என்று தெரிவிக்கிறது. ஆழ்ந்த கருத்துக்களை எளிய நடையில் அள்ளித் தரும் நுால்.
– இளங்கோவன்