புத்தகத் திருவிழாக்களில் பேசிய உரைகளின் தொகுப்பாக உள்ள நுால். வாசிப்பை நேசிப்போம் என்பதே குறிக்கோளாக உள்ளது.
நுாலறிவால் பேர், புகழ் பெற்ற அறிஞர்கள் வாழ்க்கைச் சுவடுகள் விளக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பால் உயர்ந்த பேரறிஞர்களின் வாழ்க்கை அனுபவத்தை உலக அளவில் திரட்டியிருப்பது, பரந்துபட்ட வாசிப்பு பயிற்சியைக் காட்டுகிறது.
உலகில் சிந்தனை வரலாற்றை புரட்டிய புத்தகங்கள் பற்றியும் உள்ளது. சாதனை படைத்தோர் கருத்துகளையும் எடுத்துக் காட்டுகிறது. இல்லங்களில் வைத்திருக்க வேண்டிய நுால்.
– ராம.குருநாதன்