கடவுள் பற்றிய விளக்கங்களை முன்வைக்கும் நுால்.
கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்தோர், நடுநிலை நோக்கு கொண்டிருப்போர், நம்பிக்கை இன்றி கடமையில் கவனம் வைப்போரிடம் உள்ள உளவியல்வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன. நம்பிக்கை வேறுபடுவதை ஒப்பிடுகிறது. பொது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கத்தைக் கூறி தர்க்கம் செய்கிறது.
வேதம் மற்றும் பகுத்தறிவை ஆராய்ந்து அறிய வலியுறுத்துகிறது. வேண்டுதல், யாசித்தலை தேவைகளின் பின்புலத்தில் ஆய்ந்து கருத்துகளை முன்வைக்கிறது. கடவுளை வணங்குவோர் கொண்டிருக்கும் நம்பிக்கை உணர்வை விளக்குகிறது. வணங்காதோர் நிலைப்பாட்டையும் கூறுகிறது. மனமே கடவுள் என கூறும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு