சிறைச்சாலை அவல நிலையை படம்பிடிக்கும் நாவல் நுால். பஞ்சாபி மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகள் மற்றும் ஊழியர்களின் வாழ்வை மையமாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, நீதித்துறை செயல்பாடுகளை பாரபட்சமின்றி வெளிப்படுத்துகிறது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எத்தகைய வாழ்க்கை அமையும் என்பதை தெளிவாக முன்வைத்து எச்சரிக்கை விடுப்பது போல் அமைந்துள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் போது உண்டாகும் பாகுபாடுகள், குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. சிறைகளின் நடைமுறையை எளிய நடையில் சித்தரிக்கும் நாவல் நுால்.
– மதி