சமூக முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
அடைக்கலம் கேட்ட கிளி, கொசுவுடன் ஒரு கலந்துரையாடல், முடக்கும் மூடப் பழக்கம், முளைக்கும் போதே சுருக்கப்பட்ட பயிர் போன்ற தலைப்புகளில் சமூக நலன் அடிப்படையில் கதைகள் பின்னப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
விலங்கு, பறவைகள் பேசும் காட்சியை சங்க இலக்கிய பின்னணியில் விவரிக்கிறது. பிழைகள் தவிர்க்க வலியுறுத்துகிறது. விலங்குகளை இயற்கை முறையில் பராமரிக்க சொல்கிறது. கொசு ஆராய்ச்சி பற்றி நகைச்சுவை தந்து புதுமையான முறையிலான சிறுகதை தொகுப்பு நுால்.
– புலவர் ரா.நாராயணன்