சாந்தி முகூர்த்தம் முதல் கனகாபிஷேகம் வரை, சடங்கும், சம்பிரதாயமும் வாழ்வில் வரிசைக்கட்டியுள்ளதை விளக்கும் நுால். குடும்பத்திற்கு ஏற்ப மாறுபடுவது பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
மாமன், மச்சான் உறவுகளும், சம்பிரதாய சடங்குகளும், பாச பந்தத்தை அதிகமாக்குவதாக கூறுகிறது. போருக்கு முன் களப்பலி தரல், காதலில் வேலன் வெறியாடல் போன்ற சங்க கால தமிழரின் சம்பிரதாயங்கள் குறித்து தெரிவிக்கிறது.
களத்து மேட்டில் பூசை செய்தல், புது மணத் தம்பதியருக்கு திருஷ்டி சுற்றுதல், ஆரத்தி எடுத்தல், திலகம் இடுதல் போன்றவற்றை வைதீக முறைப்படி விளக்குகிறது. டிஜிட்டல் யுகத்திலும் சடங்கு, சாஸ்திரங்கள் மாறவில்லை என நிரூபிக்கும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்