ராம கதை மற்றும் வழிபாட்டு நெறிகளை ஆய்ந்துள்ள நுால்.
தமிழ் மரபில் ராம கதை குறித்த இலக்கியச் சான்று, கல்வெட்டு, செப்பேடு, சிற்பங்களை ஆராய்ந்துள்ளது. வால்மீகி காப்பிய தாக்கம் ராமகதை பரவலுக்குத் துணை செய்துள்ளதை விளக்கியுள்ளது. ராமகதையின் கூறுகள் இலக்கியங்கள் வாயிலாக ஏற்படுத்திய சுவடை விரித்துரைக்கிறது.
பவுத்த, சமண மரபுகளில் ராமகதை வடிவங்கள் பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. தமிழில் ராமகதை, நாடகங்கள், இலக்கியங்கள், குறிப்பு நுால்கள் பற்றிய விபரப் பட்டியலும் தரப்பட்டுள்ள நுால்.
-– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு