டில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு நுால். டில்லியைக் கதைக்களமாக்கி சுழல்கின்றன.
பல பகுதிகளில் இருந்து இடப் பெயர்ந்து புதிய இடத்தில் வாழ நேரும் போது உண்டாகும் மனச்சிக்கல்களை தெளிவாகப் பேசுகின்றன. நெருக்கடி, தொந்தரவுகள் நகைச்சுவையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு பேராசிரியையின் பயண அனுபவத்தின் ஊடாக குடும்ப உறவின் ரகசியங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன.
உயர் கல்விக்காக டில்லி வரும் இளைஞனின் அனுபவங்களைக் காட்டும், ‘மிலேச்சன்’ கதை வித்தியாசமானது. சாமான்யர் முதல் தலைவர்கள் வரை கதாபாத்திரங்களாக உடையது. ஒரு சமுதாயத்தின் அனுபவப் பதிவாக இருக்கிறது. டில்லி வாழ் தமிழர்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் சித்தரிக்கும் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு