மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை வலியுறுத்தும் தொகுப்பு நுால். அரசின் வளர்ச்சி திட்டங்களில் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறது.
இந்த புத்தகத்தில், முதல் கட்டுரை தலைப்பாகியுள்ளது. கழிப்பறையின் முக்கியத்துவம், ரசாயன கழிவால் நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாசு பற்றி பேசுகிறது. கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியத்தை விழிப்புணர்வாக ஊட்டுகிறது. கழிப்பறை இன்மையால் ஏற்படும் பாதிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பலவகை கழிப்பறை அமைப்பின் மாதிரிகளையும் எடுத்து சொல்கிறது. சூழலுக்கு ஏற்ப அமைய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது. முன்னேறிய நாடுகளில் சுகாதாரம் மிக்கதாக கழிப்பறை பராமரிப்பு இருப்பதையும் கவனப்படுத்தியுள்ள நுால்.
– மதி