பெரிய புராணத்தில் சிவனை போற்றும் பகுதிகளை விளக்கும் நுால்.
சங்க இலக்கியத்தில், சிவன் என்ற பெயரை அதிகம் காணமுடியாது. பெரிய புராணத்தில் உள்ள 4,286 பாடல்களில், நான்கு இடங்களில் மட்டுமே ‘சிவன்’ என குறிப்பு உள்ளது. ஒரே இடத்தில், ‘சிவனார்’ என்ற பதம் உள்ளது. ஆறு பகுதிகளில் சிவபெருமான் என, குறிப்பு உள்ளது. அடைமொழியால், 1,008க்கும் மேற்பட்ட போற்றுதல்கள் உள்ளன. அந்த நாமங்களின் அணிவகுப்பாக மலர்ந்துள்ளது.
சேக்கிழார் பாடல் வரிகளே பூஜைக்கு உரியதாய் வந்து, தமிழ் அர்ச்சனை வழிபாடு என்பதாக குறிப்பிடுகிறது. பெரியபுராணத்தை பக்தி வளமும், இலக்கிய நயமும் உடையதாக காட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்