பவுத்தம் குறித்த பன்மொழிக்கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
தமிழக இலக்கியம், இலக்கணம், வரலாறு, பண்பாடு சார்ந்த பார்வையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பவுத்தக் குறியீடுகள், இந்துக்கலைக்கு முன்னோடி என்கிறது. கோட்பாடு அடிப்படையில் அமைந்து ஆழமான கருத்தை வெளிப்படுத்துகின்றன.
பவுத்தமும் பத்தி இயக்கமும் என்ற தலைப்பில், உலகின் முதற்புரட்சி பவுத்தமே என பதிவு செய்துள்ளது. பவுத்தம், சமணம், வள்ளுவம் ஒப்பீடு வாழ்வை நெறிப்படுத்துவதை கூறுகிறது.
மெய்யியல் நோக்கில் அசோகர் காலம் முதல் இன்று வரை பவுத்த நிலைப்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது. பவுத்த மதச்சிந்தனைகளைப் பல கோணங்களில் ஆராயும் நுால்.
– ராம.குருநாதன்