மனதை அசைக்கும் கதைகளின் தொகுப்பு நுால்.
அரண்மனை வாழ்க்கை குறித்து, ஜென்குரு கேட்கும் கேள்விக்கு மன்னன் பேச முடியாத தவிப்பை எடுத்துக் காட்டுகிறது. பொன்மொழி போல், ‘பிறர் காயப்படுத்தினால் மண்ணில் எழுதுங்கள், மன்னிப்பு என்ற காற்று அழித்துவிடும்; உதவியதை கல்லில் எழுதுங்கள், காலம் தாண்டியும் நிற்கும்’ என அறிவு புகட்டுகிறது.
கோபம், ஆவேசத்தால் ஏற்படும் விளைவை ஒரு கதை எடுத்துரைக்கிறது. எந்த பிரச்னை வந்தாலும், தீர்வை கண்டறிவது தான் புத்திசாலித்தனம் என்கிறது. பணக்காரர் என பெருமையுடன் வாழுபவரிடம், ஊசியை கொடுத்து துறவி அணுகும் விதம் சிந்திக்க வைக்கிறது. மனக் கசப்பை அன்பால் சரி செய்யும் சூட்சமத்தை, கதைகளால் உணர வைக்கும் நுால்.
டி.எஸ்.ராயன்