ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்தன்மை உடையது என உணர வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
காசியில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த மனநிலையை, தீனதயாளன் கதாபாத்திரம் வாயிலாக பகிர்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வணிக தந்திரங்களை, கைக்குழந்தையுடன் உணவு வினியோகிக்கும் செம்மலரின் குரலாக, ‘அரிமாச்சி’ கதை சிந்திக்க வைக்கிறது.
மாணவர் எதிர்காலத்தில் பற்றுள்ள ஆசிரியர், பசியை போக்க கையாண்ட வழிமுறையை, ‘பரோட்டா’ கதை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. எளிய நடையில், பக்கத்து தெருவில் நடப்பதை போல் நினைவூட்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்