சமூகத்தில் வாழ்வதற்கு போராடும் பெண்ணை சுற்றி சுழலும் நாவல் நுால்; எளிய நடையில் அமைந்து சுவாரசியம் தருகிறது.
பலதரப்பட்டோர் நிறைந்த சமூகத்தில் பெண்களுக்கு சுலபமாக வாழ்க்கை அமைவதில்லை என்ற கருத்தை மையப்படுத்தியது. கதை நாயகியின் வாழ்வு துன்பம், துயரங்களை உள்ளடக்கியது. காதலித்தவனையே நம்பி திருமணம் செய்கிறாள்; பெற்றோரால் ஒதுக்கப்படுகிறாள்.
இந்த நிலையில் கணவன் சுயரூபம் வெளிப்படுகிறது. பெற்றோர் பேச்சுக்கு பணிந்து, அவன் காட்டும் வெறுப்பு கண்டு வேதனையில் துடிக்கிறாள். சிக்கலான சூழலை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதை ஓட்டமாக உள்ளது. பெற்றோருடன் சேர்ந்தாளா அல்லது கணவன் பக்கம் நின்றாளா என்பதை சுவாரசியம் குன்றாமல் தருகிறது. ஆர்வத்தை துாண்டும் நாவல்.
– மதி