அரிய தகவல்களின் குவியலாக மலர்ந்துள்ள நுால். ஹிந்து மதத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல், வந்ததை எல்லாம் சிந்தையிலே ஏற்றுக்கொண்டு, வழித்தடம் தெரியாமல் தவிப்போருக்கு, நேரிய வழியை காட்டுகிறது.
முக்கிய நான்கு விரதங்களும், சடங்குகளும், தத்துவங்களும் முறையாக விளக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர், ஷண்மதஸ்தாபனம் செய்தபோது கணபதி வழிபாடான காணபத்யத்தை முதலில் வைத்தார் என்ற தகவல் உள்ளது. விநாயகர் அவதாரம் பற்றி விரிவான செய்திகளும் உள்ளன.
இதிகாசமான மகாபாரதம் தோன்றுவதற்கும், மூவர் பாடிய தேவாரம் கிடைப்பதற்கும், விநாயகரே காரணம் என தெளிவுபடுத்துகிறது. நவராத்திரி விரதத்தின் சிறப்பும், பலன்களும் பிரமிக்க வைப்பதாய் உள்ளன. அரிய தகவல்களை உடைய நுால்.
– டாக்டர் கார்முகிலோன்