ஆண் – பெண் உறவு, புரிதல் குறித்த கதை, கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால்.
மூன்று பெண்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்டுள்ளது. அதிக ஈர்ப்பைத் தருகிறது. கதாபாத்திரங்கள் நன்கு தெரிந்த, சந்தித்த பெண்களைப் போல இருப்பது கூடுதல் ஆர்வம் ஊட்டி, நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. வாழ்வில் பெண்கள் எதிர் கொள்ளும் கேள்விகளை, தன்னிலை ஆராய்ச்சிகளாக முன் வைக்கிறது.
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பம் உடைபடுகிறது. திருமணம் தாண்டிய உறவு குறித்து பேசும் இடங்கள் அபாரம். எல்லா புள்ளிகளும் பெண் வாயிலாக இணைவதை குறிப்பிடுகிறது. தன்னை நேசிப்பது அவசியம் என்பதை நிரூபிப்பது கவர்கிறது. வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலான நுால்.
– ஊஞ்சல் பிரபு