திகிலும் திருப்பங்களும் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரிப்பூட்டும் நிகழ்வுகள் நிறைய உள்ளன.
போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சிறுமியர் நட்பு பற்றி பேசுகிறது. சமயோசிதப்படி விட்டுக் கொடுத்து வாழும் சூழலை வர்ணிக்கும். ‘நட்பிற்கு வந்த சோதனை’ கதை அன்பை போதிக்கிறது. திருமணமாகி, 36 ஆண்டுகளுக்கு பின், ஒரு தம்பதி எப்படி எல்லாம் வாழ வேண்டுமென, ஒரு கதையில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படித்து திரும்பும் பெண், ஏழ்மையில் வாடும் சொந்தங்களை உதாசீனப்படுத்துவதை மையப்படுத்திய கதை சுவாரசியம் தருகிறது. அன்பை புரிந்து கொள்ள, ‘இயல்புகள் மாற ஒரு நிகழ்வு’ சிறுகதை வழி காட்டுகிறது. ரசிக்கும் படியான நுால்.
-– முகில்குமரன்