பழங்காலத்தில் நிலவிய கட்டுக்கதைகளின் தொகுப்பு நுால். விலங்குகளே கதாபாத்திரங்களாக இடம் பெற்றுள்ளன. சிறுவர்கள் விரும்பி படிக்கும் விநோதங்கள் உடையது.
கதைகள், வாழ்க்கைப்பாடத்தை உணர்ந்துகொள்ளும்படி அமைந்துள்ளன. புதிய நண்பர்களைச் சந்தித்தல், காகமும் – எலியும், முட்டாள் கொக்கும் – கீரிப்பிள்ளையும் போன்ற தலைப்புகளில் இனிய கருத்துகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கதை முடிவும் வாழ்க்கை நெறியை மையப்படுத்துவதாய் உள்ளது. படிக்கும் போது மகிழ்வூட்டுவதாய் இருக்கிறது. பொழுதுபோக்க ஏற்ற கதை நுால்.
– ராம.குருநாதன்