மனித வாழ்வில், ஆன்மிகத்தின் பங்கை ஹிந்து மத தத்துவங்கள் வழியாக விளக்கும் நுால்.
குலதெய்வ வழிபாட்டால் கிடைக்கும் ஆறுதல், நம்பிக்கையை கூறுகிறது. பக்தியில் இறைவனுக்கு படைக்கும் சாதம், பிறருக்கு வழங்கும்போது பிரசாதமாக மாறுவதை சொல்கிறது. குழந்தை வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டியது, விரதத்தால் கிடைக்கும் பயனை பகிர்கிறது. பிறருக்கு உதவுவதால் கிடைக்கும் மனநிறைவை சொல்கிறது.
பக்குவப்பட்ட வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வழிகாட்டுகிறது. தவறை, மனித குணநலன்களுடன் ஒப்பிட்டு பேசுகிறது. வயதுக்கு ஏற்ப பண்புடன் வாழ்ந்தால், மன அமைதி கிடைக்கும் என்கிறது. உயிர்ப்புடன் இருக்கும் வரை அறமுடன் வாழ வழிமுறைகளை வலியுறுத்தி சொல்லும் நுால்.
– டி.எஸ்.ராயன்