கடற்கரை கிராம வாழ்வை வரலாற்று ரீதியாக தெரிவிக்கும் நுால். கள ஆய்வு செய்து தெளிவான ஆவணங்களுடன் தகவல்களை முன்வைக்கிறது.
இந்த புத்தகத்தில், 11 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. குமரி மாவட்ட கடற்கரை கிராமமான வள்ளவிளை குறித்த தகவல்களை தொகுத்து தருகிறது. இன்றைய நிலையில் உள்ள தகவல்களுடன் துவங்குகிறது. மக்கள் செய்யும் தொழில், வாழ்க்கை ஆதாரங்களை அடுத்தடுத்து எடுத்துரைக்கிறது.
கிராமத்தில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. பேசும் மொழிநடை, கல்வி நிலை புள்ளி விபரம், விளையாட்டு மற்றும் பாரம்பரிய பாடல்கள் தரப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலில் பாரம்பரிய அறிவு பற்றி விரிவான விபரங்கள் உள்ளன. ஒரு வட்டார பண்பாட்டை காட்டும் நுால்.
– மதி