ஹிந்து சமய வேதங்களில் மிகவும் பழமையான நுால். சமஸ்கிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பு தமிழில் தரப்பட்டுள்ளது.
பழமையான இலக்கியங்களில் ஒன்று ரிக் வேதம். உலகில் நேர்மை வழியை கடைபிடிப்போர் எங்கு சென்றாலும் சுதந்திரமாக வாழலாம் என்கிறது. உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்போர் தங்களுக்குள் அடையாளம் கண்டு கொள்வர் என போதிக்கிறது.
இடைவிடாது உழைப்போர் மட்டுமே சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதை வலியுறுத்துகிறது. எண்ணத்தை துாய்மையாக்கி வாழ்வில் வெற்றியடைய அறிவுச்சுடரை வழங்க இறைவனிடம் கோருகிறது. ரிக் வேதத்தின் ஒவ்வொரு சுலோகமும், எளிய நடையில் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் தமிழில் தரப்பட்டுள்ளது. இந்திரன், அக்னி, வருண கடவுள்களை போற்றும் பழமையான இலக்கிய பெட்டகம்.
– மதி