தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் ஒரு கதை நிகழ்வு பொதிந்திருக்கிறது.
பெண் குழந்தைகளை வளர்ப்பது குறித்த ஆலோசனையை முதல் கட்டுரை சொல்கிறது. பெற்ற மகளின் சுதந்திரத்தை பறிப்பதை தவிர்க்க வேண்டும் என தந்தைக்கு அறிவுரைக்கிறது. உடல் பருமன் பாதிப்புள்ளோர் உடலும், உள்ளமும் எள்ளலால் சிதைக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது.
உருவ கேலி செய்யும் சிறுமையை சமூகத்தை பிடித்து உள்ள நோய் என சுட்டிக்காட்டுகிறது. ஆங்காங்கே அனுபவம் வெளிப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாகுபாடு நீங்குவதற்கு ஆண்களும் சமையல் கலையை கற்பது அவசியம் என வலியுறுத்துகிறது. அகவெளியை அலைகளாய் வெளிப்படுத்தும் நுால்.
– ராம்