வீடற்ற நிலையில் வாழும் ஏழை, எளியோரும் சட்டப்படி அனைத்து உரிமைகளும் பெற்ற குடிமக்கள் தான் என்பதை உரக்க எடுத்து சொல்லும் நுால்.
வாகன பயணத்தில் காணும் நகரமும், நடந்து கடக்கும் போது உணரும் நகரமும் வெவ்வேறானது என எடுத்துக்காட்டுகிறது. செருப்பை கழட்டி விட்டு, கோவிலுக்குள் நுழைவதை போல், ஏழைகள் பிரச்னை பரிவுடன் அணுகப்பட்டுள்ளது.
முன் முடிவுகளை விட்டு தெருவோர வாசிகளின் வாழ்க்கையில் நுழைந்து, உணர்ந்த அனுபவங்கள் ஆவணமாக்கப்பட்டுள்ளது. நகரத்தில் எழும்பி நிற்கும் உயர்ந்த கட்டடங்களுக்குப் பின், ஏழை மக்களின் உழைப்பு இருப்பதை தீர்க்கமாக சொல்கிறது. சமூக, பொருளாதார, பாலின வேறுபாடுகளுக்கு அடிப்படை, போதுமான சமூகக் கல்வி இல்லாததே என்பதை முன் வைக்கும் நுால்.
– ராம்