மக்களுக்கு உள்ள உரிமைகளை அறிந்து கொள்ளும் வகையிலான நுால். சமுதாய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இருவர் உள்ளம், மனம் வாடுதே, மாணவ, மாணவியர் கவலையில்லாத கட்சி, அரிச்சந்திரன் நாடா, குடிக்காதே, இயற்கை, எதிர்பாராதது போன்ற தலைப்புகளில் முன்னேற்றத்திற்கான கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன. பெண்கள் உயர்விற்கு ஒத்துழைக்க வேண்டியதை சமுதாயக் கடமைகளில் ஒன்றாக வலியுறுத்துகிறது.
நாடு எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதற்கு, வள்ளுவர் வழியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. உலகெங்கும் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதை சாடுகிறது. ஊழலற்ற ஒழுக்கமான சமுதாயம் வேண்டும் என்கிறது. சமுதாயம் தலை நிமிர வழிமுறைகளைக் கூறும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்