முதியோர் சந்திக்கும் உடல், மனநல பிரச்னைகளுக்கு தீர்வு தரும் நுால். நிதி மேலாண்மை, குடும்ப நலம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் முதுமை பிரச்னைகளை தீர்க்க உதவும், 50 கட்டுரைகள் உள்ளன. எளிய உடற்பயிற்சிகள், சத்தான உணவுகள், ஆழ்ந்த துாக்கம், தியானம், நடைபயிற்சியின் அவசியத்தை விளக்குகிறது. மறதி நோய்க்கு உள்ளானோர் கடைப்பிடிக்க வேண்டிய செயல் குறித்தும் அறிவுரைக்கிறது.
முதுமையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க தனி ஆலோசனை தருகிறது. முதியோர் இல்லங்கள் மேம்பட வேண்டிய அவசியம் பற்றி தக்க ஆலோசனை கூறுகிறது. முதுமையை வாழ்வின் வசந்தகாலமாக கொண்டாடலாம் என நம்பிக்கையூட்டுகிறது. முதுமையை கடக்கும் துணிச்சலை வழங்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ஒளி