வள்ளி பற்றிய புராண, இலக்கிய, கலை, வழிபாட்டு மரபுகளை ஆய்ந்து கருத்துகளை முன்வைக்கும் நுால்.
முருக வழிபாடு, மலைவாழ் மக்கள் வாழ்க்கையுடன் ஒன்றியதை விளக்குகிறது. குறிஞ்சி நில மக்களுடன் கலந்த வள்ளி, முருகன் வழிபாடு, ஆடல் பாடல், விளையாட்டுகளில் கலந்திருப்பதை முன்வைக்கிறது.
முருகக் கடவுள் சார்ந்த தொன்மம், பண்பாட்டு மரபுகளை விரித்துரைத்து தெய்வானையுடனான மண உறவை தெளிவாக விளக்குகிறது.
நாட்டுப்புற பாடல்களில் வள்ளி – முருகன் கதைகள், வழக்காறு, வழிபாடுகளை ஆராய்ந்துள்ளது. காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து பாடல் வகைகளையும் காண முடிகிறது. ஆய்வு நோக்கிலான நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு